Menu

சபாநாயகம் படிப்பகம் (Free After-School Tuition Centre – Muthur)

கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக.

அதிகாரம்:கல்வி குறள் எண்:391

என்ற வள்ளுவர் வாக்கிற்கமைய எமது கல்லூரித் தாய்க்கு மதிப்பளிக்கும் வகையில் அறிவுப் பாலத்தின் வடக்கு மாகாணத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தின் நோக்கிய விரவாக்கமே சபாநாயகம் படிப்பகமாகும். 2017 வருடத் தொடக்கத்தில் யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (ஐ.இ.) செயற்குழுக் கூட்டத்தில் புதிதாக கிழக்கு மாகாணத்தில்ஒரு படிப்பகம் ஆரம்பிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

கல்லூரியன் முன்னாள் கணித ஆசிரியராகவும் மிகவும் திறமையாகவும், நேர்மையாகவும் பணிசெய்த  காலம் சென்ற கணபதிப்பிள்ளை சபாநாயகம் அவர்களை நினைவு கூறும் விதமாக இத்திட்டத்திற்கு சபாநாயகம் படிப்பகம் என்ற பெயர் சூடப்பட்டது. இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரையும்அதை அண்டிய கிராமங்களிலும் உள்ள பாடசாலைகளைத் தெரிவு செய்யமுகமாக எமது நேரடி விஜயத்தின் மூலமாகவும் கல்வித் திணைக்களக உத்தியோகத்தவர்களின் ஆலோசனையின் படியும் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன.

  1. விபுலானந்த வித்தியாலயம்- கட்டைபறிச்சான்
  2. புவனேஸ்வரி வித்தியாலயம் – சேனையூர்
  3. அப்பாள் வித்தியாலயம் – அம்மன் நகர்.
  4. கடற்கரை சேனை வித்தியாலயம் – கடற்கரைச் சேனை
  5. சிவசக்தி வித்தியாலயம் – கிரவற் குழி

இவற்றுள் விபுலானந்தா வித்தியாலயம் முதன்மைப் பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட்டு சபாநாயகம் படிப்பகம் பாட வகுப்புகள்  நடத்வதற்காக அரசாங்க கல்வித்திணைக்கழகத்தின் அனுமதியும் பெறப்பட்டது. சபாநாயகம் படிப்பகத்தின் பொருளாதாரத் தேவைகளுக்காக யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (ஐ.இ) தேவையான நிதி உதவி ஒதுக்குவதாகவும், இதனை நீண்டகாலத்திட்டமாக  நடை முறைப்படுத்துவதற்காகவும், முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

முதற்கட்ட வகுப்புகள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்ஷையில் 2018-ல் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் மாதம் 17-ம் திகதி 2017-ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் 70 மாணவர்கள் உள்வாங்கப்பட்டார்கள். அவர்களுக்குரிய வகுப்புகள் வார இறுதி நாள்களில் நடைபெற்று வருகின்றன. இவ்வகுப்புகள் சபாநாயகம் படிப்பகம் கட்டைப்பறிச்சான்   நிர்வாக் குழு நேரடியாக் கண்காணிக்கிறது.  அவர்கள் வகுப்புகள் ஒழுங்கு படுத்துதல், ஆசிரியர்களை ஒழுங்கு படுத்துதல் நிதி நிர்வாகம் (படிப்பக மட்டத்தில்) மாதாந்த நிதி  அறிக்கை மாதாந்த மாணவர் வரவு அறிக்கை  மாணவர் திறன் அறிக்கை என்பவற்றை யாழ். இத்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (ஐ.இ.) -ன் ஒருங்கிணைப்பாளருக்கு சமர்ப்பித்தல் என்பவற்றை நடைமுறைப் படுத்துவார்கள்.
இரண்டாம் கட்ட வகுப்புகள் ஒன்பதாம் ஆண்டு மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் வார இறுதி மற்றும் மாலை நேரவகுப்புகள் உத்தியோக பூர்வமாக ஜனவரி  மாதம்  14-ம் திகதி 2018 -ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அத்திட்டத்தில் 36 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து  ஆண்டு 10, ஆண்டு 11 மாணவர்களுக்கு விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.  என்பதை மனமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழிய யாழ் நகர் இந்துக் கல்லூரி வாழிய வாழியவே.

ஒருங்கிணைப்பாளர்,
சபாநாயகம் படிப்பகம்.