இந்துவின் நட்சத்திரங்கள் 2018

Written by jhc Published in

அன்பார்ந்த உறவுகளே...,

ஐரோப்பா வாழ் இந்துவின் மைந்தர்கள், மற்றும் குடும்பத்தினரின் கலைத் திறனை கௌரவிக்க, யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க (ஐ.இ) கிளை வழங்கும் மற்றுமோர் சந்தர்ப்பம்.  "இந்துவின்  நட்சத்திரங்கள் 2018" பாடல் போட்டி நிகழ்ச்சி.

உங்கள் சிறார்கள் வளர்ந்து வரும் இளம் பாடகர்களா, அல்லது உங்கள் தன் பாடல் திறனை மேடையேற்றும் வேளை இதுவாகுமா..?  அரிய வாய்ப்பினை நழுவ விடாதீர்கள் நண்பர்களே.!
போட்டியில் வெற்றியடைந்து இந்துவின் தங்கப் பதக்கத்தை தட்டிச் செல்லும்  பாடகருக்கு கலையரசி 2018ல் பிரபல தென்னிந்திய பின்னணிப் பாடகர்கள், மதுபாலகிருஷ்ணன் மற்றும் சுருமுகி ஆகியோருடன் சேர்ந்து பாடும் அரிய சந்தர்ப்பமும் காத்துக் கிடக்கின்றது.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் அல்லது மேலதிக தகவல்கள் அறிய வேண்டுவோர் எம்மிடம் 07779 227047 என்னும் இலக்கத்தினுடாக தொடர்பு கொள்ளவும்.
முக்கிய திகதிகள் :
போட்டி விண்ணப்ப முடிவு : 31/03/2018
நேர்முகத் தேர்வு :15/04/2018
இறுதிப்போட்டி : 23/06/2018
 விழாக்குழு - கலையரசி 2018