திரு.வேலாயுதப்பிள்ளை ஜெயபாலன் (ஜெயம்)

Written by jhc Published in

விழிநீர் அஞ்சலிகள்...

யாழ் இந்து பெற்றெடுத்த ஆருயிர் புதல்வன் ஒருவனை இன்று இழந்து தவிக்கின்றது. எம் பிரித்தானியக் கிளையின் ஆரம்பகால ஆயுள்கால உறுப்பினரும், சங்கத்தின் முன்னைநாள் உப தலைவர், கிரிக்கெட் அணி முகாமையாளர், விளையாட்டு செயலர், பல முறை செயல் குழு உறுப்பினராகவும் பணிபுரிந்து தற்போதைய காப்பாளருமாகிய எம் "இந்துவின் மைந்தன்" திரு.வேலாயுதப்பிள்ளை ஜெயபாலன் (ஜெயம்) அவர்கள் இன்று (09.10.2016) ஞாயிற்றுக்கிழமை தனது 60வது வயதில் லண்டனில் மரணமெய்தியுள்ளார்.
06.02.1956 ல் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் ஈஸ்ட்காமினை வாழ்விடமாகவும் கொண்ட அமரர் ஜெயம் அவர்களின் இழப்பால் இந்துக் கல்லூரிச் சமூகமே இன்று ஆழாத்துயரில் தவிக்கின்றது.

1987 ஆம் ஆண்டின் எம் சங்கத்தின் உதயம் முதல் இந்துவின் உயர்வுக்காக சங்கத்துடன் இணைந்து தோள் கொடுத்த புதல்வனின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலிகளை காணிக்கையாக்ககின்றோம்.

*பிரிக்கமுடியாத உணர்வுகளை தந்து,  மறக்கமுடியாத நினைவுகளை விட்டு, பார்க்க   
முடியாத தூரத்திற்கு பறந்து
போனது ஏனோ ஜெயம் அண்ணா..?*

மரண அறிவிதல் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரித்தானியக் கிளை.